ஜூன் மாத ஜிஎஸ்டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12% அதிகமாகும். இதன் மூலம் 4வது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.9,600.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.