இந்த பெருமைக்கு உடையவர் தான்
திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்ற
இளம் மாமேதை.

தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம் அதுவும் ஏழாவது மாதத்திலே
இன்னும் 30 நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள்.

ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள், அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற.

பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு இருந்தாலும் என்றனர்.

தாய் முயற்சியை விடவில்லை குழந்தையோடு ஒவ்வோரு நொடியும் செலவிட்டாள்,
இறைவனின் அற்புதம் நிகழ்ந்தது.

இப்போ அந்த குழந்தை தான் உலகிலே அதிக கற்றல் நுன்னறிவு திறன் (IQ)
அதுவும் 15 வயதினிலே இந்தியாவிலே அதிக IQ அதுவும் 225 என்ற அளவில்,
போதிய அளவு அறிவு இருக்கும் மணிதனோ
85 to 115 IQ அளவில் தான்.

ஒன்பதாவது பள்ளி படிப்பு முடிந்ததும்
பொறியியல் கல்லூரிமில் B Teh.Computer science and Engineering.
அதுவும் 18 வயதில் படித்து இளம் வயதிலே பட்டதாரி என் பெருமை பெற்றார்.

இவரை அறிந்து கல்லூரியில் சேரும் குறைந்த பட்ச வயது வரம்பினை குறைத்து அதற்கு பிரத்யேகமான அனுமதி பெற்ற திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

இவர் படிக்கும் போது இவரின் அறிவினை உலகிற்கு அறியும் விதமாக
ராக்கெட் நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை பெற்று தந்தது
இவர் படித்த கல்லூரி அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனநிலை, உடல் நிலை பாதிக்கபட்ட குழந்தை என மருத்துவர்களின் கூற்றினை பொய்யாக்க போராட விலாசினி ஐந்து வயதிலே தன் வானோலி அறிவிப்பாளர் என்ற மத்திய அரசு வேலையை விட்ட இவரின் தாய் ராகமாலிகா.
குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமானவர், குழந்தையிடம் எப்போதும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையே இரவும் பகலிலும் செலவிட்டவர் இவர்.

ஆம் அசையாத நாக்கோடு பிறந்த குழந்தையை சர்வதேச அரங்கில் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் நுன்னறிவாக பேச
காரணமான இவரின் தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்து இவரின் தந்தை குமாரசாமி, ஒரு எலக்ட்ரிசியன் பெரியதாக வருமானம் இல்லாத போதும் விசாலினி எழுதும் ஒவ்வொரு சர்வதேச நுன்னறிவு தேர்வில்
நகைகளை அடகு வைத்து செலவு செய்தார். இதுவரை 13 சர்வதேச நுன்னறிவு தேர்வு சான்றிதழ் வாங்கி இருக்கிறார். ஒரு இந்திய பெண்ணின் அறிவு நுட்பத்தை
உலக அளவுக்கு கூட்டிச் சென்ற இந்த தந்தையை பாராட்ட வேண்டும்.

விசாலினி
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நடத்தும் MCP தேர்வில் 87 சதவீதம் மார்க் பெற்றவர்.
கடினமான சின்கோ சர்டிஃபைட் நெட் ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90 சதவீதம் மார்க். CCNA மற்றொரு செக்யூரிட்டி தேர்வில் 98சதவீதம் மார்க்.

இஸ்ரோ தலைவர் மயில்சாமி அவர்கள்
விசாலினியை அறிந்து இஸ்ரோ மாளிகையில் தங்க வைத்து இவரின் நுண்ணறிவு திறமையால் 700 விஞ்ஞானிகள் இருந்த கருத்துக்கு அரங்கில் இந்த பெண் படிக்கும் போதே பல மணி நேரம் பேசி அனைத்து அறிஞர்களும் எழுந்து நின்று கை தட்டி மரியாதையினை பெற்றவள் இவர்.

இப்போ இவருக்கு வயது 22.
இவருக்கு சம்பளமாக 150 கோடிக்கும் மேலாக கொடுக்க கம்யூட்டர் சாஃப்ட் வேர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.

இவரின் இலட்சியமோ மூன்று தான்.
1). இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கி தரனும், இந்த கம்யூட்டரில் துறைய நுன் அறிவு மூலம் இன்னும் பல புதிய கண்டுபிடிப்பால்.

2) தானே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அமைத்து அதற்கு CEO வாக இருந்து இன்னும் எத்தனையோ நுன்நுட்ப அறிஞர்களை உலகுக்கு தர வேண்டும்.

அவரின் மூன்றாவது இலட்சியம் தான்
மிகப் பெரியது அவரின் மனிதாபிமான தன்மையினை காட்டுவது,

அவரைப் போன்று பிறக்கும் போது
ஏதோ சில குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனியாக காப்பகங்கள் அமைத்து அவர்களுக்கு எல்லா உதவிகளையும் இலவசமாக வழங்கி
இன்னும் எத்தனையோ விசாலினைகளை
உருவாக்குவது என்பது.

இதுவெல்லாம் விரைவில் நிறைவேற வாழ்த்துவோம், அதனையே இறைவனிடம் வேண்டுவோம்.

ஏன்எனில் விசாலினிக்கு
முதலில் மாதாவின் உழைப்பு
பின் பிதாவின் உழைப்பு
அப்புறம் குருவாக பல்கலைக்கழகம்
இதையெல்லாம் தந்தது தெய்வம்.

ஆம்.
மாதா, பிதா, குரு, தெய்வம்.