சென்னை: மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டுக்கான இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதுமிருந்து 147 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள். இதுதவிர முதல் 10 இடங்களில் 8 இடங்களை சங்கர் ஐஏஎஸ் மாணவர்களே கைப்பற்றியுள்ளனர். இவர்கள் சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் கிளைகளில் பயின்றவர்கள்.

இதன்படி அகில இந்திய அளவில் கொல்லுரு வெங்கட ஸ்ரீகாந்த் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதேபோல் ஷாயில் போஸ்வால் அகில இந்திய அளவில் 2-ம் இடமும் டெல்லி அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார். லோயியா அனுஷ்கா அபிஜித் 3-வது இடம், அஜய் குப்தா- 5, ஷ்வேதப் சுமன்- 7, இந்தல்கர் பிரெடிக் பிரகாஷ்- 8, கர்நாடகா அளவில் முதல் இடம்பிடித்த விராஜ் ஸ்ரீகாந்த் ஒசூர்-தேசிய அளவில் 9-வது இடத்தையும் ஹிடேஸ் சுதார் அகில இந்தியஅளவில் 10-வது இடத்தையும் கேரளா அளவில் அரவிந்த் முதலிடத்தையும் தேசிய அளவில் 22-வதுஇடத்தையும் தமிழக அளவில் செந்தில் குமார் முதல் இடத்தையும் (அகில இந்திய தரவரிசையில் 26-வது இடம்) வைசாலி இரண்டாவது இடத்தையும் (தேசிய அளவில் 37-வது இடம்) பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களில் 8 பேர்: முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களில் 8 பேர் சங்கர் ஐஏஎஸ்அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்திய வனப்பணியில் தமிழ்நாட்டில் முதல் இடத்தைப் பெறும் மாணவர்கள் அனைவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்களா்கவே உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சுமார் 377 மாணவர்கள் இந்திய வனப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய வனப்பணிக்கான நேர்முகத் தேர்வு ஜுன் 5, 2023 முதல் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.