

மருத்துவர்கள் தினத்தையொட்டி குரோம்பேட்டை பகுதியில் உள்ள 10க்கு மேற்பட்ட மருத்துவர்களை மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவர் இ.ராஜமாணிக்கம் சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன்- மாவட்ட அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ஜே.அசோக், வட்டாரத் தலைவர் வி.ஆர்.அழகப்பன், மாவட்ட தலைவர் காஞ்சி கணேசன், ஹரிகுமார் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ஆர்.வி.சங்கர், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.