தாம்பரம் மாநகராட்சி ஜமீன் ராயப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 23-வது மாமன்ற உறுப்பினரும், கல்வி குழு உறுப்பினருமான ந.கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்தினர். பல்லாவரம் மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, செம்பாக்கம் வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே. கருணாகரன், ஜெய்பால், கமலகண்ணன், கேசவராஜன், ஹரிஹரன், சதீஷ், சுந்தர், கோகுல், ராமு, தவசி, சம்பத், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.