தமிழ் வளர்ச்சியில் வைணவர்களின் பங்கு என்ற தேசிய மாநாடு எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வீரவணநல்லூர் ஸ்ரீ குலசேகர ராமானுஜ மடத்தின் ஸ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி மூணாறு செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்தார். புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.லட்சுமி நாராயணன் சிறப்புரையாற்றினார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.