பெருங்களத்தூர் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பெண் ஜெயலஷ்மி(60), மகள் வீட்டிற்கு வந்த நிலையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று மீண்டும் பெருங்களத்தூர் வந்த அவர் ரயில்வே சுரங்கநடைப்பாதையில் நடந்துசென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஜெயலஷ்மி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து அக்கம் பக்கதினர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் விசாரணை செய்த அவர்கள் இந்த சுரங்க நடைப்பாதை தாம்பரம் இருப்புபாதை காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியதன் பேரில் அங்கு ஜெயலஷ்மி புகார் அளித்தார். பெருங்களத்தூர் ரயில்வே சுரங்க நடைப்பாதையில் ரயில்வே போலீசார் ரோந்துபணியில் இல்லாததால் தான் இதுபோல் செயின்பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதாக அங்குள்ள பாதசாரிகள் தெரிவித்தனர்.