பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஒருபகுதி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக இருவழி சாலையுடம் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 155 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் விதமான மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மேம்பாலத்தில் இணைக்கும் விதமாக ரயில்வே தண்டவளத்தை கடக்கும் 24 கோடி மதிப்புள்ள ரயில்வே மேம்பாலத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து முதல் பயணம் செய்தார். தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா ஆகியோர் மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிக்கு ஜி.எஸ்.டி சாலையில் இருந்து செல்லவும் அதே போல் ஜி.எஸ்.டி சாலை மேம்பாலத்தில் சேரும் விதமாக இந்த புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்:- திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த பாலத்தை அதிமுகவின் 10 ஆண்டுகளாமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் பணியை வேகப்படுத்தி தற்போது இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது.
அதுபோல் டிசம்பர் மாத இருதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பெருங்களத்தூர் மேம்பாலம் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.
திமுக ஆட்சியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எண்ணிலடாங்கா மேம்பாலங்களை கட்டி வாகன ஓட்டிகளின் நேரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளோம் என்றார்.