ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989ல் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார்.

2016ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கியவர்: நாகை ஆட்சியராகவும் பணியாற்றினார்.

போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றிவர் சிவ்தாஸ் மீனா.

நகராட்சி நிர்வாகம் – நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, அடுத்த தலைமை செயலாளராக நியமனம்.