குரோம்பேட்டை பகுதியில் 73 ஆண்டுக்கு மேலாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராமசுப்பிரமணியசுவாமி ஆலயமானது கடந்த 20 5 2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் கடந்துவிட்டபடியால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு 29. 6. 23 வியாழக்கிழமை அன்று பாலாலயம்கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில்வேத விற்பனர்கள் தலைமையிலும் விழா கமிட்டனர் தலைமையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேக பணிகள் முடிந்ததும் 17.9.23. ஞாயிற்றுக்கிழமை அன்றுமகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனால் பக்தர்கள் நன்கொடை வழங்குமாறும் மேலும் 25,000 க்கு மேல் பணம் கொடுக்கும் நன்கொடையாளர் பெயர்கள் கல்வெட்டில்பதிக்கப்படும் என்றும் ஸ்ரீ ராமசுப்பிரமணியசுவாமி சபாவினர் தெரிவித்தனர். மேலும் நன்கொடை அளிக்க வரும் பக்தர்கள் ஆலய வளாகம் வசந்த மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி சபாவினரிடம் செலுத்துமாறு ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.